உண்மையுள்ளது

கலைதனைத் தொழிலாக்கினார்
கற்பனை தோற்றது
கல்வியைத் தொழிலாக்கினார்
கண்ணியம் தோற்றது
அரசியலைத் தொழிலாக்கினார்
ஒற்றுமை தோற்றது
நம்பிக்கையைத் தொழிலாக்கினார்
அன்பு தோற்றது
மதங்களைத் தொழிலாக்கினார்
மனிதம் தோற்றது
ஆன்மிகத்தைத் தொழிலாக்கினார்
கடவுள் தோற்றது
தோற்றதனைத்தையும் உற்றுப் பார்த்திட
ஒன்று தோன்றுது
தோற்றுப் போவதில் கவலையொன்றிலை
உண்மை உள்ளது

எழுதியவர் : மீ.மணிகண்டன் (6-Aug-15, 9:53 am)
பார்வை : 298

மேலே