நரகாசூரன் மடிந்துவிட்டானா

நரகாசூரன் மடிந்துவிட்டானா ?

நரகாசூரன் மடிந்துவிட்டானா ,
இல்லை இல்லை
இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் -
மனிதர் வேடம் கொண்டு ...........

அரக்கர்களின் அத்தனை குணங்களின்
அகத்தில் மறைத்துக்கொண்டு
புறத்தில் புன்னைகயோடு
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் ..............

இறைதுதியை கூட இரண்டாவதாக
வைக்க சொல்லிவிட்டு
தன்துதியை பாட சொல்லி
நரகாசூரன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் ..............

அடுத்தவரின் உடமைகளை
அபகரிப்பதில் இருந்து அவர்களை
அவஸ்தைகளுக்கு உள்ளாக்குவது வரை
அடிமைத்தனம் செய்து அரக்கன் வாழ்கிறான் ...........

கொலைக்களம் பூண்டு
மனித சதைகளை உண்டு
உதிரத்தால் தாகம் தீர்த்து
உயிரோடுதான் வாழ்கிறான் நரகாசூரன் ..........

மனிதத்தின் அத்தனை சிந்தனைகளையும் மாற்றி
மிருகத்தின் குணங்களை
மனிதருக்குள் விளைவிப்பதே அரக்கனின்
அன்றாட பணி............

வேடம் போட்டு வேஷதாரியாய்
அரசியலில் அதிகாரத்தில்
அடிமைவாதிகளின் தலைவர்களாய்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் நரகாசூரன் ...........

சுயநலத்திற்காக சொப்பன கனவுகளுக்கு
மனித உயிர்களை மலிவாக பலியிடும்
பலிபீடங்களில் தலைவனாய்
வாழ்ந்துகொண்டிருக்கிறான் நரகாசூரன் ...........

காலம் கண்டிடாமல் இருக்க கண்கட்டி வித்தை செய்து
அரசியலில் , அறிவியல் மாற்றங்களில்
அன்றாடம் , அரக்க முகம் மறைக்கப்பட்டும்
மூர்க்க வன்முறைகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் நரகாசூரன் ..........

நரகாசூரன் மடிவதில்லை
மடியபோவதுமில்லை
மடிவது மனிதமும் , மனித நேயமும் தான் ?

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Aug-15, 9:53 am)
பார்வை : 205

மேலே