என்னவளே இனியவளே

..."" என்னவளே இனியவளே ""...

கன்னியின் பார்வையோ
மின்சாரமாய் தாக்கும்
இதழ் சுரந்த புன்னகையோ
புண்ணுக்கு களிம்பாகும் !!!

நீ உதிர்த வார்த்தையோ
என் உயிரை வருடும்
பேசாவுன் மெளனங்களோ
தேகத்தை தைக்கும் !!!

மச்சானை பார்த்ததுமே
உன் மாராப்புதான் விலக
மூச்சை இறுகப்பிடித்தே நீ
என் மூச்சை கொய்தாயே !!!

அசைந்தாடும் தேரைப்போல்
ஆசையால் போதையேற்றி
ஆணவத்தை அடக்கிவிட்டு
ஆண் அகத்தை அடக்கியாண்டு !!!

என்னவளே இனியவளே
அகவையில் சிறியவளே
எள்ளளவும் பிரியாமல்
ஆனந்தம் தந்தவளே !!!

என்னுள் நீ நுழைந்தே
உன்னை நிலைநிறுத்தி
கூடுவிட்டு கூடுபாயும்
தந்திரத்தை கற்றவளே !!!

என்றும் உன் அன்புடன் ,,,
முஹம்மது சகூருதீன்...

எழுதியவர் : முஹம்மது சகூருதீன்... (6-Aug-15, 10:14 am)
Tanglish : ennavale iniyavalae
பார்வை : 227

மேலே