மது விளக்கு
உன்..
மனைவியை விதவையாக்கு
வீடு வீடாய் சென்று
பாத்திரங்கள் துலக்கும் வேலைக்காரியாக்கு
உன்..
குழந்தைகளை அனாதையாக்கு
உணவுக்கு வழியின்றி திருடும் திருடராக்கு
உன்..
நண்பனை எதிரியாக்கு
நாளெல்லாம் திட்டித் தீர்க்க ஒரு காரனனாக்கு
உன்..
குடும்பத்தைக் குட்டிச் சுவராக்கு
உன்னை சொல்ல ஊரறியும் குடும்பமாக்கு
உன்..
வருமானத்தை வறுமையாக்கு
வட்டிக்குப் பணம் வாங்கி கடன்காரனாக்கு
உன்..
குடும்ப அட்டையை அடகாக்கு
குடிமகன் உரிமையையும் ரத்தாக்கு
உன்..
மகளையும் நாசம் ஆக்கு
நண்பனுக்கு இரண்டாம் மனைவியாக்கு
உன்..
இலட்சியங்களை மரணமாக்கு
மண்ணில் விழுந்தே மலடாக்கு
உன்..
உடலை பிணியின் கூடாரமாக்கு
உதவாமல் உறுப்புகளை உருவாக்கு
உன்..
உயிரையும் இப்படியே பழக்கமாக்கு
உன்னையே நீ அடிமையாக்கு
உன்னிடமே இருக்கிறது அரசாங்கம்
அதனால்தானோ ..!
காவலும் உன்னிடமே இருக்கிறது
நீ ..!
தூக்கி எறியும் குப்பிகள் நாங்கள்
அதனால்தானோ ..!
உடைக்கப்படுகிறோம்
இது...
முடிவின் தொடக்கப்புள்ளி
இப்படித்தான் இருக்கும்..
முடிவின் முற்றுப்புள்ளியில் சந்திப்போம்
உடைந்த குப்பிகள் நாங்கள்
ஆயுதங்களாய் ஆகியிருப்பது தெரியும்