கண்மணியே

நீ ரோஜாசெடியின் முற்களாக
பிறந்திருக்கலாம்
மீண்டும் மீண்டும் அதில்மலர்களாக
பிறந்ததாலோ..
இன்னும் இன்னும் பறிக்கப்பட்டு கசக்கி
எறியப்படுகிறாய்.
இல்லை இல்லை முற்களைக்கூட தந்திரமாய்
பரிக்கத்தெரிந்த
காமக் கயவர்கள் வாழும்உலகம்
இதுவல்லவோ..

பிஞ்சு பால்வடியும் முகத்தைக்கண்டேனும்
இரக்கமில்லா மிருகத்தனம்..
இறைவா.. இந்த பிஞ்சு கரங்களாலேயே தள்ளிவிட
ஒரு நரகப்படுகுளியை இவ்வுலகிலேயே
நீ அமைத்திருக்கக்கூடாதா.
விளையாடி வேடிக்கை பார்த்து திரியும்
சுதந்திர விந்தை உலகம் இது அல்ல
கண்மணியே...
புற்றுக்குள் ஒளிந்து வாழும் பாம்பாகவே நீ
வாழக்கற்றுக்கொள்..
கடைசிவரை உன்னை காப்பாற்றிக்
கரை சேரக்கற்றுக்கொள்.

எழுதியவர் : தோழி.. (6-Aug-15, 6:27 pm)
சேர்த்தது : faheema
Tanglish : kanmaniye
பார்வை : 91

மேலே