இல்லாதவைகளும் இருக்கின்றவைகளும்

அன்பு சொல்ல ஆத்தா இல்ல
திட்டி தீக்க தகப்பன் இல்ல
தலையில குட்ட தமக்கை இல்ல
தர்க்கஞ் செய்ய தம்பி இல்ல
கூடிச் சிரிக்க கூட்டாளி இல்ல
கொஞ்சிப் பேச காதலி இல்ல
வெளிநாட்டு வேலையால...
கை நிறைய பணமிருக்கு
உழச்ச களப்பு உடம்புல மிச்சமிருக்கு
பழச நினச்சா ஏக்கமாயிருக்கு
அத வாழ்ந்து பாக்க ஆசயாயிருக்கு
"இல்ல", "இருக்கு"
தெரிஞ்ச எனக்கு...
இழந்தது திருப்பி
கிடைக்குமானு
தெரியல!
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க!
இந்த
பாவி மனசுல பால
வாருங்க!!