வா வா வசந்தமே
எட்டி எட்டிப் பார்க்கிறேன்..
தெருவை..
இருட்டில்..
இரண்டு உருவங்கள்
குழந்தையோடு
தென்பட்டால்..
உடனே ..
திண்ணையிலிருந்து
இறங்கி ..
உற்றுப் பார்க்கிறேன்..
நீயும்..நம் குழந்தையும்..
உன் அப்பா வுடன்
உனது கோபம் தீர்ந்து
திரும்புகிறாயா..
என்று..
எட்டி எட்டிப் பார்க்கிறேன்..
இன்று இரவுக்குள்
நீ வராவிட்டால்..
நாளை..
..
..
நானே வந்து
உன்னை அழைத்துக் கொள்கிறேன்..
நாற்பது நாட்கள்
பிரிந்திருந்ததற்கு
கோபத்தில்
உன்னோடு சண்டை
போடாமலே இருந்திருக்கலாம்..
..சகியே..!