ரயில் பயணங்களில்
ரயிலில் பயணம் செய்ய மிக வேகமாக நடை மேடை மேல் நடந்து கொண்டிருக்கிறேன்.
முதலாவது பிளாட்ஃபாமில் இருந்து இன்னும் சில நிமிடங்களில்....ஒலித்துக் கொண்டிருக்கிறது.
டோய்ங்.,,, டோய்ங்.,,, (Doppler effect )
ஓட்டமும் வேகமும் குறைகிறது.
யாருடைய தொலை பேசியிலோ Ring tone. அழகிய கண்ணே, உறவுகள் நீயே
வினாடிக்குள் உலகம் நிலைபெறுகிறது.
அந்த மனிதர் நகர்ந்து விட்டார்.
சுய நினைவு திரும்புவதற்குள் ரயில் சென்றிருந்தது.