மழை

மாலை நேர மழையே
மண் வாசலைத் திறக்கும் உளியே!
உன் வருகையைப் பார்த்து
மலர் சோலைகளெல்லாம் பூத்து
புது வாசம் தருகின்றன!!
உன் வருகையை சிறப்பிக்க
வான் எங்கும் மணம் வீசி
உன் மேகத் தோள்களில்,
தென்றலைக் கோர்த்து மாலையிட்டு
உன்னை வரவேற்க காத்துக் கிடக்கின்றன!!
ஆனால் நீயோ,
வரும் நேரத்தை
வரையறுக்க இயலா வண்ணம்
வந்து போய் விடுகிறாய்!!
இருந்தும்,
உன் வருகைக்காக காத்துக் கிடக்கின்றன
மலர்ந்து விட்ட தோட்டங்கள்!!!