அவுல் பகிர் ஜனுலப்தின் அப்துல் கலாம்
பேப்பர் போடும் சிறுவனாம் நீ இன்றோ
அனைத்து பேப்பர்ரும் உன் பெயர் சொல்ல வைத்தாய்
அலைகள் இல்லையாம் ராமேஸ்வரத்தில் இன்றோ
அலை அலையாய் மக்களை வர வைத்தாய்
பெரும் கருனைவானாம் நீ இன்றோ
எங்கள் கண்ணீரை கண்டுகொள்ளாமல் அமைதியாய் உறங்குகிறாய்
மனித நேயத்தை போற்றுபவனாம் நீ இன்றோ
எங்களுக்கு மனவேதனை கொடுத்துவிட்டு எங்கே போனாய்