கார்த்திகா வெங்கட் ரமணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திகா வெங்கட் ரமணி
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Aug-2015
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  5

என்னைப் பற்றி...

கவிதை எழுத மிகவும் பிடிக்கும்.......இந்த பதிவு தளம் தந்ததற்கு நன்றி

என் படைப்புகள்
கார்த்திகா வெங்கட் ரமணி செய்திகள்
கார்த்திகா வெங்கட் ரமணி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
16-Mar-2018 1:49 pm

முருகன்

மேலும்

கார்த்திகா வெங்கட் ரமணி - செல்வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2018 6:56 am

வாழ்க்கையெங்கும்
முட்கள் நிறைந்த பாதை...
நண்பர்களோடு
நடைபோடும்போது
முட்களும் மலர்களாய்
பரிணாமவளர்ச்சி பெறுகிறது!

மேலும்

நன்றி 12-Mar-2018 3:38 pm
நன்றி 12-Mar-2018 3:38 pm
நன்றி 12-Mar-2018 3:38 pm
அழகான உண்மை ......தோழி 11-Mar-2018 7:35 pm
கார்த்திகா வெங்கட் ரமணி - RANJEETHA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2018 12:37 pm

எழுத்து பிழை இருப்பின் ஏற்றுக்கொள்
எண்ணத்தில் பிழை இருப்பின்
என்னை மன்னித்துவிடு
நான் மாற்றிக்கொள்கிறேன்
"உனக்காக"

மேலும்

அருமை.......... 07-Mar-2018 8:13 pm
உண்மையான அன்பு எண்ணங்களை எப்போதும் திருத்தும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Mar-2018 6:00 pm
காதலுக்காக எதுவும் செய்யலாம்.அருமை.! 07-Mar-2018 8:26 am
நன்றி 06-Mar-2018 1:16 pm
கார்த்திகா வெங்கட் ரமணி - பகவதி லட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2018 11:02 am

என் பற்றுதலை வெட்டிவிடவே உன் பொய் கோபம்..!!

உன் மனம்-குணம்
நானறிவேன்..!!
எனக்கென்று பந்தம் வந்தால் பறந்துவிடுவேன்
பருந்தாக
பாசமகளே-உன்
பிரிவையும் சகித்து..!!
பக்கத்தில் பார்த்து பேசுவது இன்னும் சொர்ப(சில) நாட்களே என்ற
பாசத்தில்தான்
பேச வந்தேன்..!

வேளைபளு வதைக்கிறது உன்னை..!!
அறிவேன் உன் கடமைகளை..!
அறிவேன் உன்
கோபங்களை..!
அறிவேன் உன்
அறிவுரைகளை..!
அறிவேன் உன்
மன எண்ணங்களை..!!


உன் எண்ணம்-செயல் அனைத்தும் சரியே..!!

பக்கத்தில் இருக்கும்போது பற்றறுத்து பேசிவிட்டு நான்
பறந்து சென்றதும்
பற்று நினைத்து வருந்தாதே..!!

அன்னையின்
அடிப்படை குணமே
அது தான்
அறிவேன

மேலும்

மரணம் வரை அவள் கால்களுக்கு சேவை செய்தாலும் பட்ட பிறவிக்கடன் தீராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Feb-2018 7:11 pm
கார்த்திகா வெங்கட் ரமணி - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2018 10:12 pm

நித்திரையின் நீட்சி
நிம்மதி தந்திடும்
என்றாலும்
அலைபாயும் நினைவுகளுக்கு
இடைக்கால ஓய்வே என்றாலும்
கனவுகளுக்கு
தற்காலிக நீட்டிப்பு
என்றாலும் ...

நித்திரையும்
நிரந்தரமானால்
முத்திரையும்
குத்திடுவர்
சவமென்று... இயற்பெயரும்
இறந்திடும்
உடனடியாய்
இவ்வுலகும்
மறந்திடும் உனை
அதிவிரைவில்...

வாழ்வெனும்
வயல்வெளிக்கு
வரப்பெனும்
எல்லையுண்டு...
விரிந்து பரந்த
விந்திய மலைக்கும்
விளிம்புண்டு ...

மானிடனே
மனதில் கொள்க
நமக்கும்
முடிவுண்டு...
வாழ்ந்திடு
மனிதனாக
மனிதமுடன்
உள்ளவரை....

பழனி குமார்
04.03.2018

மேலும்

மிக்க நன்றி 11-Mar-2018 3:28 pm
மிக நன்றி சர்பான் .நிதர்சனமான உண்மை 08-Mar-2018 9:11 am
கருவறையில் பத்துத் திங்கள் தூக்கத்தில் கிடந்தவன் அதனை வாழ்க்கையில் சில பொழுதுகள் நாளும் ஒத்திகை பார்த்து பின் கல்லறைக்குள் நிலையான தூக்கத்தை மெய்யான வாழ்க்கையை நோக்கி பயணிக்க தொடங்குகிறான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Mar-2018 11:43 pm

உலகெங்கும் பாவம் செய்பவர்கள் பிறந்த நாடா சிரியா ?
இல்லை
பாவம் செய்பவர்கள் செய்ய பிரிந்த நாடா ?

பிள்ளைகளின் சிணுங்கல்களை தாங்க முடியவில்லை நம்மால்
அங்கே
பிள்ளைகளின் பிணங்களை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்

கல்லடியை காட்டிலும் கண்ணடி வல்லியதாம்
அங்கே
குண்டடியில் குழந்தைகள் பிண குவியலாம்

எதை பார்த்து கொண்டிருக்கும் அனைவரும் பாவம் செய்பவர்களே
அனைவருக்கும் அடுத்த ஜென்மம் சிரியவில்லே

மேலும்

சிரியா என்று சிரிப்பாயோ ? 05-Mar-2018 10:45 pm

ஓர் இடத்தில் ஒரு நிமிடம் நிற்காத என் கால்கள்
இன்று
ஒரு மணி நேரம் அசையாமல் நிற்கிறது குழந்தையின் தொட்டிலை ஆட்டிக்கொண்டு .............

மேலும்

அதுதான் வாழ்க்கை... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:08 pm

ஓர் இடத்தில் ஒரு நிமிடம் நிற்காத என் கால்கள்
இன்று
ஒரு மணி நேரம் அசையாமல் நிற்கிறது குழந்தையின் தொட்டிலை ஆட்டிக்கொண்டு .............

மேலும்

அதுதான் வாழ்க்கை... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:08 pm

பேப்பர் போடும் சிறுவனாம் நீ இன்றோ
அனைத்து பேப்பர்ரும் உன் பெயர் சொல்ல வைத்தாய்

அலைகள் இல்லையாம் ராமேஸ்வரத்தில் இன்றோ
அலை அலையாய் மக்களை வர வைத்தாய்

பெரும் கருனைவானாம் நீ இன்றோ
எங்கள் கண்ணீரை கண்டுகொள்ளாமல் அமைதியாய் உறங்குகிறாய்

மனித நேயத்தை போற்றுபவனாம் நீ இன்றோ
எங்களுக்கு மனவேதனை கொடுத்துவிட்டு எங்கே போனாய்

மேலும்

ஈடுகட்ட முடியாது அவரது இழப்பு.. 08-Aug-2015 2:36 pm
மேலும்...
கருத்துகள்

மேலே