நித்திரைக்கும் முத்திரையுண்டு

நித்திரையின் நீட்சி
நிம்மதி தந்திடும்
என்றாலும்
அலைபாயும் நினைவுகளுக்கு
இடைக்கால ஓய்வே என்றாலும்
கனவுகளுக்கு
தற்காலிக நீட்டிப்பு
என்றாலும் ...

நித்திரையும்
நிரந்தரமானால்
முத்திரையும்
குத்திடுவர்
சவமென்று... இயற்பெயரும்
இறந்திடும்
உடனடியாய்
இவ்வுலகும்
மறந்திடும் உனை
அதிவிரைவில்...

வாழ்வெனும்
வயல்வெளிக்கு
வரப்பெனும்
எல்லையுண்டு...
விரிந்து பரந்த
விந்திய மலைக்கும்
விளிம்புண்டு ...

மானிடனே
மனதில் கொள்க
நமக்கும்
முடிவுண்டு...
வாழ்ந்திடு
மனிதனாக
மனிதமுடன்
உள்ளவரை....

பழனி குமார்
04.03.2018

எழுதியவர் : பழனி குமார் (4-Mar-18, 10:12 pm)
பார்வை : 280

மேலே