முன்னோடிகள்

முகம் சுளிக்காதே,
முன்னோர்களெல்லாம்
மூடர்களல்ல-
நம்
முன்னேற்றத்தின்
முதற்படி அவர்கள்..

மிதந்து செல்கிறாய்
சொகுசுக் காரில்
சோக்கான ரோட்டில்..

முள்ளைப் பொறுக்கி
முதுகு முறிய
முதல்தடம் போட்டவனை
முதலில் கொள்
மனதில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Aug-15, 7:09 am)
பார்வை : 60

மேலே