தொலைந்ததாய் நிம்மதி

சிறு சிறை கூடாரங்களில்
கழிகிறது மனிதனின் அன்றாட
நாகரீக வாழ்க்கை ...........

விரும்பாவிட்டாலும்
குகை சூழல்களில் குற்றுயிராய்
ஆரோக்கியமில்லாத சுவாசம் ...............

திறந்த வானமிருந்தும்
ஜன்னல்களே இல்லாத
அடைபட்ட அந்த நாலு சுவற்றிற்குள் ...............

தங்களின் சூழலை தாங்களே கெடுத்து
சொர்க்கங்களை நரகமாக்குவதில்
மனிதனை மாற்று உயிர்கள் மிஞ்சுவதில்லை ...............

மரண பயணங்களில்
மரணமாகின்றன ஆயிரம் ஆயிரம்
அப்பாவி உயிர்களே ............

ஆன்மீக பயணத்தில்
மட்டுமே அமைதி இருப்பதாய்
உணர்கிறது மனித மனம்............

வீட்டின் சுத்தத்திற்க்காக
வீதிகள் நாற்றமெடுக்கின்றன
ஆரோக்கியம் கேள்விகளில் ..........

கூடும் இடங்களில்
கோவில்கள் மட்டுமே சுத்தமாய் -
மற்றவைகள் ?

இருந்ததை தொலைத்துவிட்டு
எங்கோ தேடுகிறான் மனிதன்
நிம்மதியை ..........

மனிதனின் மாற்று வாழ்விடத்திற்கு
இன்னொரு பூமியையா
இறைவன் படைக்க போகிறான் ?

அசுத்தங்களாலே பெருகுகிறது
அன்றாடம் அவஸ்தைகள்
சிந்திப்பது எத்தனை பேர் ?

நாளை நாம் ஒவ்வொருவருக்கும்
அவசியமாய் தேவைப்படலாம்
ஒரு மூச்சு கவசம் ?

விலங்கினங்கள் கூட
தங்கள் கூடாரங்களை
அசுத்த படுத்தி கொள்வதில்லை -
மனிதன்?

சூழல்களை சூனியமாக்கிவிட்டு
கோவில்களில் எதற்காக
பரிகார நிவர்த்திகள் ............

மனிதனின் தவறுகள்
மனிதனால் மட்டுமே மாற்றமுடியும் -
அதுவரையில் ,
நிம்மதி தொலைந்ததாகவே .............

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Aug-15, 9:07 am)
பார்வை : 105

மேலே