கலாச்சாரம் - ஒரு பெரும் கவலை
![](https://eluthu.com/images/loading.gif)
காலக்கொடுமை -
கண்களோ ஆச்சரியத்தில்
மாதுக்களின் கையில் மது ..............
பட்டதாரிகள் பட்டைதாரிகளாய்-
சுதந்திரத்தின் உச்சம் -
சோகத்தில் பெற்றோர் .............
நாகரீக வாழ்க்கையின்
நரக காட்சிகள்
பதறுகிறார்கள் பத்தினிகள் ...........
ஆள்பவரின் சாதனையில்
அன்றாடம் அன்றாடம்
ஆயிரம் மதுக்கடைகள் அவதாரம் ...........
பள்ளிகளைவிட
பார்கள் நவீனமயமாய்
மங்கும் மாணவர்களின் வாழ்க்கை ............
இளசுகள் எல்லாம்
தெருக்களில் தள்ளாட்டம்
கேள்விக்குறியில் கற்பு...........
குதர்க்கங்களை பேசிப்பேசியே
நிதர்சனங்களை மறந்துவிட்டது
சமுதாயம் ...........
இன்றைக்கும் மதுவிலக்கிற்கு
மாற்றுக்கருத்து இருப்பதுதான்
வேதனையிலும் வேதனை ............
அனுபவங்களின் கொடுமைகளை
கண்ட பிறகும் அலட்சியத்தின்
அவசியம்தான் என்ன ?
சந்தன வாசம் மணக்க வேண்டிய
சமுதாய மார்க்கத்தில்
சாக்கடையாய் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது மது ............
பெண்களின் கோரிக்கையை ஏற்க
ஆழ்ந்த யோசனையில்
ஒரு பெண் அரசாங்கம் ...........
வாக்குகளுக்காக மட்டும்
வாக்களிக்கும் அரசியலில்
நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா ?
நிதர்சனம் காட்சியில் ?
மக்களின் மாற்றத்தை மறுப்பதுதான்
ஆட்சிகளின் ஆளும் தர்மமா ?