சொந்தமாக ஒரு தொழில் - பகுதி இரண்டு

விவசாயம் வெளுத்து விட்டது,
உழுதவனுக்கு உலக்கு மிச்ச மெனும்
கூற்றை மாற்றியமைக்க
ஏற்றுமதி ஏற்றமதியாகும்

உணவுக்காக உலகம் தவிக்கிறது
விவசாயியின் விலாசம் தேடுகிறது
உங்கள் முயற்சி பாலமாகட்டும்
உங்கள் உணவை உலகமே புசிக்கட்டும்

அரசின்புள்ளி விபரங்கள் வெப் சைட்டில்
அள்ளிதருவது உங்கள் வீட்டு இன்டர்நெட்
எந்தநாடு எதை எவ்வளவு எப்போது
வாங்கியது விற்றது எல்லாம் அறியலாம்

உள்ளுரில் விலை போக வில்லை எனில்
வெளியூரில், இல்லை வெளி நாட்டில்
விலையை சந்தை தீர்மானிக்கும்
தரம்தான் விலையை கூட்டும்

இன்றைய சூழலில் தரமான பொருளுக்கு
தான் விலையும் நல்ல வாடிக்கையும்
ஒரு நெட்டில் விளம்பரம் செய்யுங்கள்
உங்கள் வீடு தேடி வரும் ஆர்டர்

வணிகம் என்பது கடலில் வீசும் வலை
வெப் உலகம் கடல் போல உங்கள் வலையில்
உலகம் அடங்கும் இல்லை
ஆலோசனை வழங்க ஆயிரம் பேர்.

சங்கிலி போல இணைத்துக்கொண்டால்
சரம் சரமாய் செழிக்கும் வியாபாரம்
விவசாயம் விடியலை சேரும்
விரலிடுக்கிலும் பூ பூக்கும்

என்னவளம் உள்ள எந்த விளைநிலம்
என்ன பயிரிட ஏற்ற வழிமுறை
சொல்லி கொடுக்க வேளாண்துறை
பல்கலை தேடாதது யார் குறை?

காவிரி பாலாறு தென் பெண்ணை
நீரை பயன் படுத்தும் பாங்கில்லை
குறை கூறி பொழுது சாய்ந்து போனால்
விடியல் இங்கு விதைக் கப்படுவதில்லை

உண்மையில் நாம் பொய்களையே கேட்கிறோம்
பொய்களை போலிகளை நம்பி ஏமாறு கிறோம்
சீர் தூக்கி பார்த்தலே சான்றோருக்கு அழகு
வானம் பூமிக்கு ஏற்றபடி காலத்தே பயிர் செய்வோம்.

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (9-Aug-15, 3:23 pm)
பார்வை : 88

மேலே