சொந்தமாக ஒரு தொழில் - பகுதி ஒன்று

தொழில் .துவங்கும் என்ணம்
ஏற்புடையதாயின் முனைப்பு வேண்டும்!
திடமாக, இன்னும் தீர்க்கமாக
முயல வேண்டும்!

வாழ்க்கை படகு நதியிலா, ஆற்றிலா,
அலையோடா அல்லது எதிர் திசையா,
களம் புகுமுன் யுக்தியதை
மேற்கொள்ள சக்தி வேண்டும்.

பணம் வேண்டும் பணமில்லாமலும் தொழில்
துவங்கலாம், அதற்கு ஒரு மனம் வேண்டும்
இணக்கமாய் ஒரு நட்பு வேண்டும்
இலவசமாய் இங்கு எதுவுமில்லை!

ஆளுமை பணம் இரண்டும் ஆனபின்
அடையாளம் காணவும் அனைத்தும்
அறியவும் நல்ல ஆலோசனை
வேண்டும், நல்ல என்றால் மிக நல்ல!

சுற்றம் நட்பு வாழ்க்கைக்கு தேவை,
தனி மரம் தோப்பாகாது, தெரியாததா?
ஈகோ என்பது கஷ்டம் தரும்,

மனத்தளவு நூல் விடும் பட்டமே உயர்வு
நூலின் அளவை கூட்டுவது குறைப்பதே தீர்வு
வணிகம் வாழ்க்கை ஆகலாம்,
வாழ்க்கை வியாபாரம் ஆகி விடக்கூடாது.

எல்லோரையும் வசப்படுத்தினால்
தொட்டது எல்லாம் துலங்கும்.
வெற்றிக்கும் தோல்விக்கும்
வித்தியாசம் விளங்கும்.

விரலுக்கு ஏற்ற வீக்கம் போல
சிறுக கட்டி பெருக வாழலாம்.
உணவு பொருட்களை விவசாயியுடன்
இணந்து வணிகம் செய்யலாம்,

வணிக நுணுக்க மின்றி விவசாயி
தற்கொலை செய்வது செய்தியாகிறது
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியுமா?
புரவி வேகத்தில் வணிகம் மேற்க்கொண்டால்
விடியுமுன் வெள்ளி முளைக்கும்

பண்டமாற்று காலம் தொட்டு வணிகம்
கடல் தாண்டி நீளுகின்றது
திசைகள் உண்டு விபரம் அறிந்தால்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம்.

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (8-Aug-15, 11:16 pm)
பார்வை : 280

மேலே