அறத்தின் உயர்வு புதுக்குறள்

அறத்தொடு பொருளீட்டி அற்றார்க்கும் அளிப்போர்க்கு
சிறப்பொடு செல்வம் பெருகும்

சிறப்பொடு செல்வமும் பெருக்கிடும் அறந்தனை
துறக்காமல் காத்தல் கடன்

முடிந்தவரை மறுக்காமல் அறம்செய்க வாழ்க்கை
முடிந்தபின் அஃதே துணை

அறம்தவறி வாழ்வோர்கள் அந்தணரே ஆயினும்
அற்பராய் எண்ணிடும் உலகு

நல்லவரின் நலிவும் வல்லவரின் பொலிவும்
நாள்தொறும் எண்ணப் படும்

அறந்தனை நினையாது அல்லவை செய்வோரை
மறக்காமல் தீமை தொடும்

தன்னலம் கருதியே தக்காரை வஞ்சிப்போர்
தலைமுறை தாழ்ந்து விடும்

முன்பிருந்தார் நேற்றில்லை நேற்றிருந்தார் இன்றில்லை
என்பதே உலகின் நிலை

பொய்சொல்லி பேர்பெற்ற பொல்லாத மனிதர்கள்
மெய்சொல்லின் ஏற்காது உலகு

பேராசை வெட்கையும் பிறன்பொருளில் கொள்ளார்
பெருமையை விரும்பு பவர்

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (9-Aug-15, 6:34 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 64

மேலே