நீ ஊருக்கு போகிறாயா
உன்னோடு பேசுகிறேன்......
நீ ஊருக்கு போகிறாயா ?
என்றேன் வருத்தத்தோடு..
ஒரு நாளில் வந்துவிடுவேன்
பொறுத்துக் கொள்ளுங்கள் என்றாய்.
நீயில்லாத ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு யுகமாய் கழிகையில்
ஒரு நாள் என்பது
ஒரு லட்சம் நொடிகளை தொடுகின்ற
பெரும் கணக்கு என்றேன்.
மறுநாளே வந்து நின்று என் மயக்கம் தெளித்தாய்.
நீ எங்கு வேண்டுமானாலும் போ
என்னகொன்றும் கவலை இல்லை
என்னோடு பேசுகின்ற எல்லைக்குள்
நீயிருப்பதாக இருந்தால்... என்றேன்
சரி பேசுகிறேன் என்று சம்மதம் தந்தாய்
நீ பேசாத போது என்னை உனக்கு
நினைவு படுத்திக் கொண்டே இருப்பேன்.
நீ என்னை மறந்து விடக் கூடாது என்பதற்கல்ல
உன்னை மறக்க விட்டு விடக் கூடாது
என்பதற்காகவும் தான் என்றேன்.
தலையில்; அடித்துக் கொண்டே... தள்ளி தள்ளி போகிறாய்...
நீ என்னோடு பேசும் வரை........