இதுதான் காதலா

கனவும், நினைவும்
என்னை மாறி மாறி வதைக்கின்றன,
இதுதான் காதலா...........

கவிதை எழுதும் என் கைகள்
தடுமாறி புள்ளிகளையும், கோடுகளையும்
இணைக்கின்றன
இதுதான் காதலா......

உண்மை நிலை புரியாமல்
உன்னை நினைக்கின்றேன் !
என் உயிர்
உருகும் நிலை வருவதற்குள்
உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை .........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (10-Aug-15, 7:49 pm)
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 65

மேலே