போதாதடா ஒற்றை முத்தம்

என் உயிர் வாழப் போதும்
உன் உள்ளங்கை வெப்பம் !

என் மழைதுளிகளுக்குப் போதும்
உன் மார்போடு ஓர் ஸ்பரிசம்!

என் பயணங்களுக்குப் போதும்
உன் பாதங்களின் பக்கம் !

என் அதிகாலைக்குப் போதும்
நீ வந்த அழகான கனவு !

என் மெளனங்களுக்குப் போதும்
உன் உயிர்துளைக்கும் பார்வை !


ஆனால்


என் வெட்கம் தொலைக்க
போதாதடா

நீ வைத்து சென்ற

"ஒற்றை முத்தம் "

எழுதியவர் : chelvamuthtamil (10-Aug-15, 9:27 pm)
பார்வை : 196

மேலே