காதல் வேண்டாம்
கண்டது கனவா ?
கனவில்,
உன் நினைவா ?
நினைவில்,
கண்கள் மட்டும் பேசியதே,
கன்னங்கள் இரண்டும் சிவந்ததே,
நாணங்கள் நம்மை சீண்டியதே..
நாம் எங்கோ போனதுவே..
இது காதலா..
நிஜத்தில் மறுக்கிறாய்,
நினைவை மறிக்கிறாய்,
கனவாய் உதிக்கிறாய்,
காலை உதிர்கிறாய்..
காதலி..
காதலும் வேண்டாம்,
காமமும் வேண்டாம்,
கலகமும் வேண்டாம்,
கள்ளமும் வேண்டாம்,
என்னோடு நீ
உன் பெயர் ஒட்டாய் நான்..