தூங்கா குழந்தை தாயின் தாலாட்டு

கண்மணியே,
உன் விலையில்லா புன்னகையை
யார்யாரோ விலை பேச
வந்தவர்கள் கண்
வைத்துவிட்டாரோ!! நீ
தூங்காமல் சிணுங்குகிறாய்!!!

உன்னை அள்ளி அணைத்தேன்
நீ விழி சாத்த மறுக்குகிறாய்!!
உன்னை கொஞ்சி பார்த்தேன்
நீ ஓஓ வென்று அலறுகிறாய்!!

பொன்மகளே,
பசியேதும் எடுத்தால்
என் மார்பு தொடு - நடுஜாமம்
வந்தாலும் உனக்காய் தருவேன்!!
உனை அணைத்தால் என்
மார்பில் சுரக்காதோ பால்!!!

என் தாலாட்டில் ஏதேனும்
பிழையிருந்தால் கண்ணே,
மனம் தேத்தி இப்போது நீ உறங்கு.
பின்னே,உனக்காய் கற்கிறேன்
நல்இசை பாடல்!!!

எக்கவலை என் மனம் ஏறி
நின்றாலும்-பாதி சிரிப்பில்
நீ தூங்கும் அழகினை ரசித்தாலே
அக்கவலை கனவாக
போய்விடுமே!! என்னோடு
நீ இருந்தால் நம் வாழ்வில்
கிடையாது சோகம்!!

ஏதேனும் பேய் கனவு கண்டாயோ!
கண்ணே,உன் முகம் பார்த்தாலே
பேயே அடங்கிவிடும்! பின்
ஏது கவலை உனக்கு??

கொஞ்சுவதற்கு
பஞ்சமில்லை!!உனக்கு
பொம்மைகளும் பஞ்சமில்லை!!
சுற்றி சுற்றி நீ சிரித்த காலை நாட்கள்
நீ தூங்க உன் காலடியில்
கிடக்கிறது தவம்!!

சைகையிலே நீ கேட்ட பொருள்கள்
உனை சுற்றி கிடக்கையிலே
மகளே!பின் எதற்கு அழுகை!?
உன் கண்ணீர் துடைத்திலே
என் சேலை ஈரமானது
காலையில் காய்ந்தது!!

இவ்வருடம் மட்டும் தனிமையிலே
நீ உறங்கு!!
மறுவருடம் உனக்கு
விளையாட தம்பி வரும்
அவனுடன் நீ கொஞ்சு!!!!

எழுதியவர் : (11-Aug-15, 8:59 pm)
பார்வை : 97

மேலே