கஜல் -11

உன்னை நான் பார்த்து விட்டால் எண்ணம் கனியுது அன்பே
என்னை நீ பார்த்து விட்டால் இன்பம் விடியுது அன்பே

நீ வீசும் புன்னகையால் பூத்தாடுது புது ஆசை
உள்ளுக்குள்ளே வசிக்கும் துன்பம் மடியுது அன்பே

சித்தத்தில் நீ இணைந்தாய் மாறா உறவென, என்னில்
ஓர் ஈடில்லா இணையில்லா தூய்மை பொழியுது அன்பே

உன் வண்ணம் என் நினைவில் துள்ளும் இனிய சுவைப்போல்
ஆனந்தம் பொங்கவே என் சிந்தை பொலியுது அன்பே

கேட்டவுடன் தந்து விட்டாய் காதல் எனுமொரு பாடம்
ரோச்சிஷ்மானுக்கு வாழ்வின் அர்த்தம் புரியுது அன்பே

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (12-Aug-15, 5:51 pm)
பார்வை : 44

மேலே