நினைவுகளை மட்டும்...
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணாடி சன்னல் வழி
கண்கள்
தேடியது எதிர் வீட்டில்...
காலை கதிரவனின்
வெளிச்ச வீச்சு
எதிர் வீட்டு சன்னலை
சேரும் முன்னே...
கண்கள் சந்தித்தது...
கண்களின்
அலை வரிசையில்
கருத்து பரிமாற்றம்...
தந்தி அடித்தன
உள்ளத்தின் உணர்வுகள்...
ஓராயிரம் செய்திகள்
உதட்டின் உச்சரிப்பில்...
குறுஞ்செய்தியாய்
இணையத்தில் கலந்தது
எண்ணத்தின் எழுத்துக்கள்...
கனவுகள் என்னவோ
பால் வெளியில்...
ஆனால்...
ஏனோ...ஒரு நாள்
அலைவரிசை
மாறிப்போனது...
தந்தி
தடைபட்டது...
இணையச்சங்கிலி
அறுந்துபோனது...
அவனின்
கை நரம்புகளும் தான்...
இன்று
மாலைகளுக்கு நடுவே...முகம்
மட்டும் காட்டியவனாய்...
இணையம் தாண்டிய
இன்னொறு உலகம்
நோக்கி...
நினைவுகளை மட்டும்
இங்கே நிஜங்களாய்
நிறுத்திவிட்டு...