நான் வரையும் சித்திரமாய் அவள்

சிரிக்க சிரிக்க வரைகிறேன்
சிவக்க சிவக்க விடுகிறேன்
முறைக்கும் பார்வை அழிக்கிறேன்
மோன பார்வை மீட்கிறேன்

சேலை மூடும் நெஞ்சத்தில்
சென்று நுழைந்த இதயத்தை
துடிப்பில்லாமல் விட்டு வைத்து
தூரிகை வடிவில் அலைகிறேன்

பூக்கள் கொண்டு தேகத்தை
வாசம் வீச இழைக்கிறேன்
வண்ணம் கொண்டு இதயத்தை
வில்லை போல வளைக்கிறேன்

விரல்கள் நீளா நகத்தில்தான்
வெண்ணிலவு பிறையை குழைக்கிறேன்
மருதாணி கொண்டு மிச்சத்தை
அந்தி வானமாக அப்பினேன்

மடி சாய மட்டும் துடையென
பிடி வாழைபோல மூடினேன்
கணுக்களில் இருக்கும் கிண்ணத்தில்
கால் பாதம் வரை சந்தனமாய் பூசினேன்

கொலுசு ஒன்றை போட்டுவிட்டு
ஓடி சென்று தேடினேன்
மற்றொரு கொலுசுக்காய் மனமிங்கு
மாயை வடிவில் அவளோடு கூடினேன்

எழுதியவர் : . ' .கவி (21-May-11, 5:47 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 319

மேலே