தவறிய அழைப்பின் மறுபக்கம் ...
என்றுமே தவறியதில்லையே
என் அழைப்புக்கள்?!?!
அழைப்புகளின் அழுகுரல்
அகிலத்தையே உலுக்கியிருக்கும் - உன்
செவிப்பாறைகளை மட்டும்
சேராமல் விட்டதென்ன?!
காத்திருக்கும் இந்த ஒரு நொடியும்
உயிரை வதைக்கும் பெரும் வலி ...
தாலாட்டை பாட முடியாத
ஊமைத் தாயாய் என்
தவிப்பை தெரிவித்தேன் குருஞ்செய்தியாய்!