யாவுமே ஒன்றுதான்
கயவனும் ஒன்றுதான்
தூயவனும் ஒன்றுதான்
'அன்னையின்' பார்வையில்...
இருளும் ஒன்றுதான்
ஒளியும் ஒன்றுதான்
'ஒளி இழந்தவன் ' பார்வையில்...
சுமையும் ஒன்றுதான்
சுகமும் ஒன்றுதான்
'துறவியின்' பார்வையில்...
பொய்யும் ஒன்றுதான்
மெய்யும் ஒன்றுதான்
'பட்சோந்தியின்' பார்வையில்...
இகழ்வும் ஒன்றுதான்
புகழும் ஒன்றுதான்
'மேதையின்' பார்வையில்...
பாவமும் ஒன்றுதான்
புனிதமும் ஒன்றுதான்
'விலைமகள்' பார்வையில்...
சாவும் ஒன்றுதான்
வாழ்வும் ஒன்றுதான்
'துணிந்தவன்' பார்வையில்...
இறந்தவனும் ஒன்றுதான்
இறைவனும் ஒன்றுதான்
'இழந்தவன்' பார்வையில்...
உஷ்ணமும் ஒன்றுதான்
உறைபனியும் ஒன்றுதான்
'பாட்டாளியின்' பார்வையில்...
அதர்மமும் ஒன்றுதான்
தர்மமும் ஒன்றுதான்
'அறிவீனன்' பார்வையில்...
தாழ்ந்தவனும் ஒன்றுதான்
உயர்ந்தவனும் ஒன்றுதான்
'நீதிமான்' பார்வையில்...
யாவுமே ஒன்றுதான் நம்மை 'படைத்தவன்' பார்வையில்...!!!

