இன்றமிழ் எழுத்தாளர்களே வாழ்க
வரைந்த வார்த்தைகளுக்குள்
மறைந்த வரிகள் எத்தனையோ
மனதில் பதிந்த பறையொன்று
நீர் கசியும் வார்த்தைகளை
உதடுகளால் வடித்தெடுத்து
எழுதுகோல்
ஏட்டில் பாதிக்கும் கணம்
ஒழிந்துகொள்ளும் வார்த்தைகள்
எத்தனை
ஆழப்பதிந்த ஆழ்மனதில்
அன்புக்கு அடைக்கலமாக
ஆண்டு வந்த தேசத்தில்
தேடி பார்த்த தேசத்தில்
மர்மாமாய் மறைந்து போன
மகிமைகள் எத்தனை
மனக்கரும்பலகையில்
மனதின் கஷ்டங்களை
மனப்படமாக்கி எழுதி வைத்த
கதைகள் காரணமில்லாமல்
அழிந்த கதைகள்
எத்தனையோ
இத்தனைக்கும்
அத்தனைக்கும்
எத்தனிக்கும்
வரி தொடுக்கும்
அகராதிகள்
உயிராகி,
எழுத்தாகி, ஏடாக்கி
எட்டிப்பார்க்கும்
கவிபெட்டகத்தில்
தேடிபார்க்கும் கலைகளை
படிக்கும் போது
எத்தனை அருமை
அத்தனையும்இயற்றிய
எழுத்தாளருக்கு
இன் புகழ் இதுவே