கூழாங்கல்
ஏதோ ஓர் சந்தத்துடன்
அசைந்து
புரியாத புதிர்களைப்
புதுப் புது ராகத்துடன்
பாடிச் செல்லும்
பூரண படைப்புயிர்..
வசப்படாதஎல்லைக்குள்
வரையறுக்கப் படாத
வாசனைகள் புதைத்து
வழுக்கிச் செல்லும்
நீர்ப்பூ...
தீதொன்றும் அறியாத
தெளிவான கண்களின்
பார்வையில்
தீங்கு விளைவிக்காத
சாந்தமான சடப் பொருள்...
எங்கோ ஆரம்பித்து
எப்போதாவது
சலனமற்ற ஓடைகளில்
இளைப்பாறி
ஆர்ப்பரிக்கும் அலையசவில்
அலைக்கழிந்து
இலக்கில்லாத தம்
பயணத்தில்
எவரையும் துன்புறுத்தாது
அசைந்து கொண்டிருக்கும்
இயல்பறியா இயக்கங்கள் ...
என்னையும் மீறிய ஆர்வம்
கையில் பொறுக்கிக்
கொள்கிறேன்..
பையில் போகும் போது
அவற்றின் பார்வையில்
இனம்புரியாத சோகம்
முகங்களில்
ஏதோ ஓர் கழிவிரக்கம்
வேண்டாம் ..
மறுபடியும் ஓடையில்
போட்டு விடுகிறேன்
அவர்கள் பயணம்
தடை இன்றித் தொடரட்டும்...