ATM மூலம் மது விற்பனை

என்னோடா நீ ஏதோ இயந்திரத்தை உருவாக்கியிருக்கறதா நம்ம நண்பர்கள் சொன்னாங்க. என்னடா அது.

டேய் அதுக்குப் பேரு மது விநியோக இயந்திரம். ஏடிஎம் இயந்திரம் மாதிரி. ஏடிஎம் கார்டு மாதிரி ஒரு கார்டு மதுப்பிரியர்கள் அதுக்கு பணம் கட்டி வாங்கிக்கணும்.

கார்டை சொருகி அவரவர்க்குக் குடுத்த ரகசிய எண்ணை அமுக்கி ஒரு குவார்ட்டர் மதுவக்கான காசைப் போட்டா குவார்ட்டர் பாட்டில் வந்து நிக்கும். மதுப்பிரியர் அதை எடுத்துக்க வேண்டியதுதான்.

இதனால என்னடா நன்மை.?

ஒரு நாளைக்கு ஒரு கார்டுக்கு 1 குவார்ட்டர் பாட்டில் தான் எடுக்க முடியும். மொடாக் குடியர்கள் அதிகம் குடிக்க முடியாது. வெள்ளி, சனி ஞாயிறு மற்றும் விடுமுறை திருவிழா நாட்களில் இந்த இயந்திரம் வேலை செய்யாது. இதுக்கு நாங் காப்புரிமை வாங்கி வச்சிருக்கேன். மதுவிலக்கை அமல் படுத்துவதிலே பல சிக்கல்கள் இருக்கறதால அரசாங்கமே இந்த இயந்திரத்தைத் தயாரிக்கற உரிமையை எனக்கு 2 கோடி பணம் குடுத்து வாங்கிருச்சு. எல்லாம் வேலையில்லாத மெக்கானிக்கல் எஞ்சினியர்ன்னு என்னக் கிண்டல் பண்ணீங்களே இப்ப நாங் கோடீஸ்வரன்டா.

வாழ்த்துக்களடா நண்பா

எழுதியவர் : மலர் (13-Aug-15, 9:58 pm)
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே