அன்னையை நினைத்து அன்பான நன்பாக்கள்
--------------------------------------------------
எண்ணிடும் நேரமெலாம் என்னருகில் நீவந்து
என்னின் குறைகளை என்னவென - நீகேட்டு
என்னையும் களிப்புற எல்லையிலா இன்புற
என்றும் வழிகாட்டிடு என்தாயே !
--------------------------------------------
ஏங்கிடும் அன்பிற்கும் ஏக்கங்களின் தீர்விற்கும்
ஏதும் வழியுமிலை ஏதொன்றும் -இதயமுமிலை
ஏறிட்டுப் பார்த்திடவே ஏற்றமிகு மனிதருமிலை
ஏதுமறியா நான்தேடுகிறேன் என்தாயை !
----------------------------------------------
அமைதியின் உருவமாய் அகிலத்தில் வாழ்ந்தவளே
அலைகடலென சோதனைகள் அளவின்றி - வந்தாலும்
அதிர்வின்றி தாங்கியும் அணுவளவும் தளராதும்
அசைவின்றி எதிர்கொண்ட என்தாயே !
----------------------------------------------------
நித்தம்உனை நினைக்கின்றேன் நின்பாதம் வணங்கிட்டு
நிழலாடும் நினைவுகளை நீர்த்திடா- நிலையிலேயே
நின்முகம் நெஞ்சிலே நீர்வீழ்ச்சியோ என்விழிகளில்
நினைக் காணாத குறையேதாயே !
------------------------------------------------------
பழனி குமார்
( மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் என் தாயும் தந்தையும் )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
