ஒரு இடம் வேண்டும்

பெற்றேடுத்த தாய் நான் உன்னை பெற்று எடுத்த தாய் நான்....!
எனக்கு ஆசைகள் உண்டு மகனே எனக்கும் ஆசைகள் ஆசைகள் உண்டு....!
பேராசை எதுவும் இல்லை மகனே எனக்கு பேராசை எதுவும் இல்லை....!
உன்னை சுமந்த உயிர் நான்....!
உன்னை ரசித்த உயிர் நான்....!
உன் துன்பம் அறிய ஒரு இடம் வேண்டும்....!
உன் துயரம் துடைக்க ஒரு இடம் வேண்டும்...!
செல்லமாய் உன்னை கொஞ்சி வசைபாட ஒரு இடம் வேண்டும்....!
எப்போதும் தொலைவில்லாமல் உன் அருகிலேயே இருக்க ஒரு இடம் வேண்டும்....!
தனிமையில் தவிக்கும் முதியோர் போல் இல்லாமல் என் பிள்ளை தங்கம் என்று ஊர் சொல்லி போற்ற ஒரு இடம் வேண்டும்....!
என்றுமே உன்னோடு நான் வாழ உன் இதயத்திலும் சிறு இடம் வேண்டும்....!
உன்னில் ஒரு இடம்
வேண்டும்
!....உன்னோடு நான் உனக்காக நான்....!