அம்மா

இன்பம் வந்தால் இல்லம் நிரப்பிடுவாள்...
துன்பம் வந்தால் தன்னுள் அடக்கிடுவாள்...
அயராமல் உழைத்திடுவாள்....
உறங்காமல் விழித்திடுவாள்....
நமக்காக வலிகள் எதையும் தாங்கிடுவாள்.....
கிடைப்பதை பகிர்ந்திட சொல்லிடுவாள்....
கிடைக்காததை மறந்திட செய்திடுவாள்....
அன்பினால் எகரஸ்ட்-யும் மிஞ்சிடுவாள்....
உள்ளத்தால் அனைவரையும் கவர்ந்திடுவாள்....
பொறுமையினால் அனைவரையும் வென்றிடுவாள்....
கற்பனைக்கூட செய்ய முடியாத அதிசய பிறவி அவள்....
அந்த கடவுளும் போற்ற
வேண்டிய கடவுள் அவள்....
....அம்மா.....
!....உன்னோடு நான் உனக்காக நான்....!