விருந்தாளி

விருந்தாளி
அழையா விருந்தாளியே
அழையாமல் ஏன் வந்தாயி
உன் விஜயம் ஜயமாக
என் நா விழையாது
உன் எண்ணம் எடையிழக்க
பல வண்ணம் பூசினேன் - இருந்தும்
வெண்மேகமானது என் கூந்தல்
உன் குணம் குலைய
என் முகம் முழுதும் - மொழிவினேன்
களிம்புகள் பல - இருந்தும்
மலை மடிப்புகள் போல்
சுருக்ககள் என் கன்னத்தில்
உன் பளிங்கு பற்களின் பிம்பம் மறைக்க
எண்ணெய் பல தடவினேன் - இருந்தும்
என் கபாலத்தில்
உன் பளிங்கு பற்களின் சிரிப்பின் பிம்பம்
ஏய் அழையா விருந்தாளியே
என் அழகை அழித்து
அலகோலம் அரங்கேற்றி
அகம் மகிழ்தல் - முறையோ
இத்தனையும் நிறைவேற்றி
நன்மை ஒன்றை செய்தாயி
அழிய அறிவு அனுபவத்தை
அள்ளி அருளினாயி – நன்றி
அழையா விருந்தாளியே

என்றும்,
கமலக்கண்ணன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (13-Aug-15, 11:24 pm)
Tanglish : virunthaali
பார்வை : 91

மேலே