நாகரிகம்

நாகரிகம் -இனியவன்
----------------------


ஒரு மன்னனை போல்
கம்பீரமாய் நிற்கும்
ஆற்றங்கரை "அரசமரம்" .

அங்கே
பூசணி க் கொடிகள் ,வாழை மரங்கள்
இஞ்சி செடிகள்.....
பஞ்ச ண்ணாவின் கைங்கர்யத்தில்
விளைந்து கிடக்கும்
யாருக்கும் உரிமையாக .

தேக்கு மரங்களோ
இரு கரையிலும்
கண கச்சிதமாய் இடை வெளி விட்டு
காவல் கக்கும் சிப்பாயாக.

அரும்பு அத்தையின்
வீட்டு எதிரேயுள்ள
சறுக்கலில் துள்ளி ஓடும்
கெண்டை மீன்கள்
கெக்கலிக்கும்.

மதகடி பிரித்த
வாய்க்கால் வழி ஓடி
முப்போகம் கொழிக்கும்
வளமான வயல்வெளி
என நீளும் எங்கள் "பழையாறு".

அதில்
ஆடு மாடு ,ஆளரவம்
வண்டி போக வர
போக்குவரத்திற்கு போட்ட
"பாலம்"
ஊரின் அரசியல் பேச
உகந்த இடமானது
-------------------
-------------------
இப்போது அப்படியில்லை
ஆற்றங்கரை நாகரிகங்களின்
அடுத்த பரிணாமமாக
காட்டாமணக்கும் ,கள்ளி ச் செடியும் வளர
குப்பையும் ,பிளாஸ்டிக்கும்
குவிந்து கிடக்கிறது
ஊர் மட்டும் மறக்கவில்லை
பாலத்தில் கூடிக் கலைகிறது
உன்னையும் என்னையும் பேச......

எழுதியவர் : இனியவன் (21-May-11, 6:29 pm)
சேர்த்தது : iniyavan
பார்வை : 308

மேலே