எது நம் உண்மையான சுதந்திரம்

நாளைக்கு ஆகஸ்ட்15......இந்தியா சுதந்திரம் அடைந்தநாள்!!!!

இந்த சுதந்திரம் வாங்க எத்தனையோபேர், வியர்வை,இரத்தம் சிந்தியிருக்காங்க.
இப்படி கஷ்டப்பட்டு வாங்குன சுதந்திரத்தக்கூட நம்ம மக்கள் நல்லநாள்
பார்த்துதான் வாங்குனாங்க.ஏன்னா, இனியாவது நம்மநாடு முன்னேறட்டும்,
மக்களுக்கு நல்லது நடக்கட்டும்-ன்றதால.ஆனா நடக்குறது என்னமோ வேற. சரி,சுதந்திரம் நல்லநாள் பார்த்து வாங்குன கதை எத்தனப்பேர்க்கு தெரியும்? தெரியாதவங்க இப்ப படிச்சு தெரிஞ்சுக்கோங்க……

ஆகஸ்ட்15 இந்தியாக்கு சுதந்திரம்–னு வெள்ளக்காரங்க சொல்லிட்டாங்க.
ஆனா,நம்ம ஆளுங்க முகத்துல ஒரே கலவரம். என்னானு பாத்தா, ஆகஸ்ட்15 அஷ்டமி.அடுத்தநாள் 16 நவமி, நல்லநாள் இல்லையே. அப்பபோய்
சுதந்திரம் வாங்குனா நாடு கெட்டுப்போகுமே-னு பயந்தாங்க.(அக்கால சாஸ்திர நம்பிக்கை)சரி ஆகஸ்ட்17 வாங்கிக்கலாம் இத்தன வருடம் பொறுத்த நமக்கு ஒரு நாள்-ல பெருசா ஒன்னும் ஆகிடாது-னு சொன்னாங்க.என்னதான் நம்ம தலைவர்கள் பகுத்தறிவாளராக இருந்தாலும், மக்கள் இந்த விஷயத்துல தங்களோட ஒத்துப்போகமாட்டாங்க-னு புரிஞ்சு, வெள்ளக்காரங்க-கிட்ட பேசிப்பாத்தாங்க. ஆனா, அவுங்க குறிச்ச தேதி-ய மாத்த முடியாது-னு சொல்லிட்டாங்க.அப்பதான் நம்ம தலைவர்கள் அறிவுப்பூர்வமா இந்த விஷயத்த கையாண்டாங்க. எப்படிதெரியுமா??

நமக்கு அடுத்தநாள் என்பது காலை 5மணியில் இருந்துதான் தொடங்கும். ஆனா வெள்ளக்காரங்களுக்கு, அடுத்தநாள் என்பது, இரவு 12 மணியில் இருந்து தொடங்கும். அதனால நமக்கு எந்த பாதிப்பும் இல்ல, இரவு 12 மணிக்கு சுதந்திரம் வாங்கிக்கலாம்-னு முடிவு பண்ணி வாங்குனாங்க.

இப்படி கஷ்டப்பட்டு பல தியாகம் பண்ணி வாங்குன சுதந்திரத்தக்கூட நல்ல நாள் பார்த்து வாங்குனாங்க நம்ம ஆளுங்க. ஆனா இப்ப அந்த சுதந்திரம் இன்னும் முழுமையோட இருக்கானுதான் என் கேள்வி????.

என்னப் பொறுத்தவரை, கெடச்ச முழுசுதந்திரமும் பறிபோய், இப்ப பாதி சுதந்திரத்துக்குப் போய்டோம். அதுக்கு முழுக்காரணமும் நாமதான்.

என்னைக்கு வெள்ளக்காரங்கள வாணிகத்துக்கு உள்ள அனுமதிச்சமோ, அப்போ இருந்து இப்போ வரைக்கும் சிறைப்பட்டுதான் இருக்கோம்.

”அப்போ வெளிப்படையா , இப்ப நாகரீகமா”

ஆனா இப்ப வெள்ளக்காரங்களுக்கு மட்டும் இல்லாம அவுங்க விட்டுப்போன அவுங்க மொழிக்கும் தொழில்நுட்பத்துக்கும் அடிமையா இருக்கோம். அதுமட்டும் இல்லாம நமக்குள்ள நாமே ஒருவருக்கு ஒருவர் ஆசையால பகையால அடிமையாய்ட்டு இருக்கோம்.கொடி-ல எத்தன சக்கரம் இருக்கு, அதுல எத்தன அர்த்தங்கள் இருக்கு-னு தெரியாத அயோக்கிய பசங்கள்ளாம் இன்னைக்கு சுதந்திரநாள்-னு சொல்லிட்டு கொடிய குத்திட்டு கொடியேத்திட்டு இருக்காங்க.

நான் சொல்றது, சிலருக்கு கோபத்தை எழுப்பலாம். ஆனா யோசிச்சுப்பாத்தா, நிஜம் என்னன்னு உங்களுக்கே புரியும். நீங்களே முழுசும் படிச்சுட்டு சொல்லுங்க.

இன்றையசுதந்திரம்

அந்நியர்கள் வெளியேறியும் அவங்களோட மொழிக்கும் பொருளுக்கும் அடிமைப்பட்டுதான் இருக்கோம். ஆங்கிலம் ஒருமொழி. ஆனா இன்னைக்கு அத அறிவா, கவுரவமா பாக்குற அளவுக்கு நம்ம மனசுல அவங்க வெதச்சுட்டு போய்ட்டாங்க நம்மளோட சில வெள்ளக்காரங்க எடுபுடி முன்னோர்கள்..
நம்ம ஆளுங்களும் மகுடிப்பாம்பா ஆடத் தொடங்கிட்டாங்க. மகுடி பாம்புக்குக்கூட மயக்கம், அந்த மகுடியின் அசைவு வரைதான். ஆனா நம்ம ஆளுங்க, நிரந்தரமா கண்ண திறந்துட்டே தூங்குறாங்கனு-தான் சொல்லனும்.

நீங்க கூர்ந்து பார்த்தா தெரியும்! எந்த நாட்டுக்காரன்-கிட்டயும் வெள்ளக்காரங்க அவுங்கமொழி-ல தான பேசுறாங்க. அவுங்க மொழிக்குதான முக்கியத்துவம் கொடுக்குறாங்க?

ஏன் அவுங்களும் நம்ம மொழிய கத்துக்கிட்டு பேசக்கூடாதா???

ஏன் அவுங்க பேசல??அப்ப இதுக்கு பேரு என்ன??

நாம இன்னும் எதிர்த்து கேள்வி கேக்காம நாகரீகமா அடிமையா இருக்கோம்-னு தான அர்த்தம்?

நம்மக்கூட வியாபாரம் வச்சுக்க வந்தவங்க அவுங்க.. நியாயமா பார்த்தா அவுங்கதான் நம்ம மொழிய கத்துக்கிட்டு நம்ம-கிட்ட பேசனும். ஆனா நடக்குறது என்னமோ தலைகீழாதான். எல்லாம் பணம் பண்ணுற வேலை. மனுஷன் பணத்துக்கு அடிமை. அந்த பணத்த வச்சு இன்னும் நம்மள நாகரீகமா அவங்க அடிமையா வச்சுருக்காங்க!

அதுக்காக நான் பிறமொழி எதிர்பாளி இல்ல. மொழிய மொழியா பார்க்கணும். ஆனா அறிவா பாக்க ஆரம்பிச்சதோட விளைவு, நிறைய வேலை இல்லா தமிழ் பட்டதாரியதான் உற்பத்தி பண்ணிட்டு இருக்கோம்!!...

“ஆங்கிலம்தெரியல-னா வேலை இல்ல.அதும் நம்ம தமிழ்நாட்டுல.... “

இத ஏன் மாத்தக்கூடாது?

ஏன் மற்ற நாடுகள் எல்லாம் அவுங்க மொழியவச்சு முன்னேறல-யா???
நாம என்னைக்குதான் மாறப்போறோம்….?????இதோட விளைவு, இப்ப தூயதமிழ் அழிஞ்சு, ஆங்கிலம் கலந்த கலப்பட தமிழ்தான் வளர்ந்துட்டு வருது. இந்த உலகத்திலயே தமிழ்தான் முதல்மொழி. ஆனா இன்னைக்கு, அது அழிஞ்சுட்டு வரத நாம தடுக்க முடியாம பாத்துட்டு இருக்கோம்.

ஏன் இவ்வளவு பேசுற என்னாலயே ஆங்கிலம் கலக்காத தமிழ் தொடர்ந்து பேச முடியாது. ஆனா முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன் . இந்த பழக்கத்த மாத்திக்க. காரணம், நான் வளர்க்கப்பட்ட சூழ்நிலை.மம்மி–னு கூப்டா பெருமப்படுற காலம் இது. ஆக மொத்தம் வெள்ளக்காரங்க போயும், அவுங்க மொழிக்கு அடிமையாதான் இருக்கோம் நாகரீகமான முறையில்....

இதுமட்டும்இல்லஇன்னும்நிறையஇருக்கு….


“எப்ப ஒரு பொண்ணு கழுத்து நிறைய நகையப்போட்டு தன்னந்தனியா எந்தவித பாதிப்பும் இல்லாம நடுராத்திரில திரும்பி வருதோ, அப்பதான் இந்தியாவுக்கு உண்மையா சுதந்திரம்” -னு நம்ம மகாத்மா காந்தி சொன்னார்….

( எங்கயோ கேட்ட வசனமா இருக்கேனு யோசிக்காதீங்க… “ஸ்டார்” படத்துல வரும்)

பாவம் அவர் கலிகாலம், இப்படி கேவலமா இருக்கும்-னு நெனச்சுக்கூடப் பார்த்து இருக்கமாட்டார். ஆனா, இப்ப அவர் இருந்தா இதத்தான் சொல்லி இருப்பார்..

“என்னைக்கு பிஞ்சுக்குழந்தைகள் தவறான கண்ணோட்டத்துல பார்க்கப்படாம இருக்கோ, அப்பதான் உண்மையான சுதந்திரம்-னு “

உண்மைய சொல்லனும்-னா கஷ்டப்பட்டு வாங்குன சுதந்திரத்த முக்காவாசி மக்கள் தவறான வழி-ல தான் கொண்டுப்போய்ட்டு இருக்காங்க. இந்த சுதந்திரத்திற்காக தானா அத்தனை அப்பாவி மக்களும், தன்வாழ்க்கையைத் துறந்து இரத்தம் சிந்தினாங்க..??

அப்பலாம் , வெறும் பணம் நகைக்குதான் பாதுகாப்பு இல்ல. ஆனா இப்ப, பெண்கள் , குழந்தைகள் , ஆண்கள் ஏன்,வயசான பாட்டிக்குகூட பாதுகாப்பு இல்ல. இதான்உண்மை!

இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் பயந்து பயந்து நம்மளோட தனிசுதந்திரம் பறிப்போய்ட்டுதான் இருக்கு.

இப்படிஒருபக்கம்இருக்க, இன்னொருபக்கம் கெடச்சசுதந்திரம், குடி , கூத்து , கும்மாளமா பொழுது போக்கா போய்ட்டு இருக்கு. அதும் இப்ப பெண்கள் கூட்டம் ஆண்கள் கூட்டத்துக்கு சமமா இருக்கு.அந்தக்கூட்டதுக்கு அதுதான் சுதந்திரம்!

கிடச்ச சுதந்திரம் நாட்டோட வளர்ச்சிக்கும் மக்களுக்கும் பயன்படுத்துனா, நம்மநாடு எப்பவோ வல்லரசாகி இருக்கும்.

ஜான்ஸ்ட்ராச்சி–னு ஒரு பிரிட்டிஷ்காரர் , நம்ம இந்தியாவ பற்றி ஒரு புத்தகத்துல,

“ஒரு வசதிக்காக, பலவேறுபட்ட நாடுகள் சேர்ந்த ஒரு பகுதிக்கு, இந்தியான்னு பெயர் சூட்டப்பட்டிருக்கு.கலாச்சாரத்தாலும் ,மொழியாலும் , இனத்தாலும் வேறுபட்ட மக்கள் எப்போதும் ஒரே தேசமா இருக்க முடியாது.கடந்த காலத்தில் இந்தியான்னு ஒரு தேசம் இருந்ததில்லை. இனி வரும் காலங்களிலும் இருக்கப் போவதில்லை-னு “எழுதி இருந்தாரு.

ஆனா அவரோட கருத்தை, இப்ப வர நாம,ஜெயிக்கவிடல.அந்த ஒரு வகை-ல எனக்கு ரொம்ப சந்தோஷம். சுதந்திரம் கெடச்சப் பிறகும், நாம இன்னும் ஒற்றுமையா இந்தியா-னு ஒரு பெரிய மரத்துக்குள்ள ஆயிரம் வேர்களா உறுதியா இருக்கோம். இதும் இன்னும் வலிமை அடஞ்சா, நம்மநாடு இன்னும் உயரத்துக்குப் போகும். அதுக்கு, நாமதான் முழுமூச்சா செயல்படனும். கெடச்ச சுதந்தரத்த மீண்டும் முழுமையாக்கி , நம்ம தியாகிகளுக்கு பெரும சேர்க்கனும்! அப்பதான் என்னப்பொருத்தவர உண்மையான சுதந்திரதினம்!! உங்களுக்கு எப்படி ???????

ஜெய்ஹிந்த்...........

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (14-Aug-15, 10:24 pm)
பார்வை : 3678

மேலே