மற்றுமோர் ஆகஸ்ட் 15 » ஆதர்ஷ்ஜி

மற்றுமோர்
ஆகஸ்ட் 15.

» ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~

சாலைகளின் சங்கமிப்பில்
பளபளக்கும் கொடிகள் விற்று
பசிபோக்க அலையும்
சிறார்களையும்,

சிவப்புக்கும் பச்சைக்குமிடையேயான
சில நொடிப்பொழுதில்
சில்லறை மாற்றுவதற்காக
அவசர அவசரமாக
பேரம் பேசி
கொடி வாங்கும் மனிதர்களையும் மௌனமாய் சிரித்துக் கடக்கிறது
மற்றுமொரு விடுதலை நாள்!
~~ஆதர்ஷ்ஜி

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (15-Aug-15, 6:24 pm)
பார்வை : 60

மேலே