நிழல்கள் - சந்தோஷ்

நிழல்கள்.
************
நிழல்கள் ஒன்றுக்கூடிக்கொள்ளலாம்
தருமபுரியில் பிரிக்கப்பட்டு
தண்டவாளத்தில் முடிக்கப்பட்டதே
ஒரு காதல்...
அந்த காதலுக்குச் சொந்தக்காரர்களின்
நிழற் உருவங்கள் ஒன்றுக்கூடியதைப்போல..

எந்த ஆதிக்கச்சாதிக்காரனாலும்
அந்த நிழற் உருவங்களை தேடிடமுடியாது .
அவ்விரண்டும்...
அந்த ஊரின் தலித் வீட்டிலோ..
வன்னியரின் வீட்டிலோ
கவுண்டனின் வீட்டிலோ
ஏன்...
இஸ்லாமியனின் வீட்டிலோ
ஒரு கிறிஸ்துவனின் வீட்டிலோ கூட
தஞ்சம் புகுந்து
மஞ்சம் கண்டு
ஒரு புதுவித நிழற்குழந்தைப் பெற்றிருக்கலாம்.

யாருக்குத் தெரியும்..
அதுதான்.... காதலின் புனித ஆவியென்று...

சாதிவெறிகளுக்கு புலப்படாதக் காதல்
எப்படியும் தன்னை சாதித்துக்கொள்ளும்..
மனித உருவிலும்
உருவமற்றும்......

ஏனெனில் நிழலை,உயிரை வெட்டிப்பிரிக்கும்
சூத்திரம் அறியவில்லை மனிதப்பிரிவனை மூளை.

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (15-Aug-15, 6:29 pm)
பார்வை : 142

மேலே