என்னவளுக்குச் சொந்தமானவன் செய்யும் சபதம்

புத்தி சொன்ன அன்னையை
அன்பு கொண்ட அப்பனை
கூடிச் சிரித்த தங்கையை
பால்யம் மாற்றி பருவம்
தந்த வீட்டை
ஒடி விளையாடி மகிழ்ந்த வீட்டோர வீதியை
பழகி திளைத்து அனுபவம்
நல்கிய ஊரை...

என் சுயநலத்தால்
உன் நலத்தை
விட யத்தனித்து
என்னருகே அமர்நதிருக்கும்
என்னவள் ஆனவளே!

உன் முன்
உனக்காய்
நான் கொள்ளும்
சபதம் இது!

பெண்ணே கேளாய்!

உன் கூந்தல் கருநாகம்
நஞ்சின்றிப் பொய்த்துப்
போனலும்,

உன் ஒட்டியானமே உடைந்து
போகிற நிலை
வந்தாலும்,

உன் பனிக்குடம் உடைய
வாய்ப்பற்ற தருணம்
வாய்த்தாலும்,

உன் கொலுசின் ஒசையே
நான் என்றும் பாடும்
மோகன இசை.

உன் நெற்றித் திலகமே
நான் காணும்
விடியல் கிழக்கு.

உன் கொஞ்சல் மொழிகளே
நான் ரசிக்கும்
பிள்ளைத் தமிழ்.

உன் மாராப்புச் சேலையே
நான் கொள்ளும்
மான அவமானம்.

இறுதியாய்...

நம் வாழ்வின்
இறுதியில்...

என்னால் நீ
அமங்கலி ஆக
விட மாட்டேன்.

என் முன்னே
நீ போய்விடு
என் கண்ணே!

அடுத்த நாள்
நானும் வருகிறேன்
உன் பின்னே!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (15-Aug-15, 7:43 pm)
பார்வை : 118

மேலே