இன்று புதிதாய் பிறந்தோம்________________________நிஷா

இனிமையிலும் இனிமையடா! _தேன் ஒழுகும்
இன்பச்சுதந்திரத்தை அடைந்தோமடா!
கவலையிலும் கவலையடா!-இந்தியாவை
கலகமுடன் தனித்தனியாய் பிரித்தோமடா!_இந்தச்
சுதந்திர தின விழாவில புது
சமத்துவ ஒளி ஏற்றி வைப்போமடா!

சிறைபட்ட பறவைகளாய் இருந்தோமடா!_இன்று
சிறகடித்து சுதந்திரமாய் பறந்தோமடா!
சீரிய தலைவர்கள் இறந்ததினால்
சிக்கலில் சிக்குண்டு பாரதம் தவிக்குதடா!-இந்தச்
சுதந்திர தின விழாவில் புது
சுகமான அரசியலை உருவாக்குவோமடா!

மதம் என்ற மதம் பிடித்ததடா! மாசற்ற
மனிதநேயத்தை மறந்தோமடா!
சாதி என்று சரிந்தோமடா!_சகோதர
சமத்துவத்தை மறந்தோமடா!-இந்தச்
சுதந்திர தின விழாவில் புது
சகோதர அன்பை போதிப்போமடா!.

திருமணத்திலும் தட்சணையை கேட்டோமடா!_பெண்களை
துயரத்தில் வாடவிட்டு பார்த்தோமடா!
துன்பத்திலும் துன்பமடா! _இந்தத்
துயர்நிறை பழக்கத்தை மறப்போமடா!
சுதந்திர தின விழாவில் புது
சந்தோஷ விளக்கேற்றி வைப்போமடா!

தீவிரவாதிகள் வெறிக்கூட்டம் சுற்றுதடா!_இரக்கமின்றி
தினம் தினம் மக்களை குண்டு மழையில் கொல்லுதடா!
கலவரங்கள் நாட்டில் பெருகுதடா! இதனால் பாரதம்
குமுறிக் கண்ணீர் பொழியுதடா!
சுதந்திர தின விழாவில் புது
சண்டையில்லா பாரதத்தை படைப்போமடா!

பாரத நாட்டின் எதிர்காலம் இளம் மாணவர் கையிலடா!
புதிதாய் இன்றே பிறப்போமடா!_இனிவரும்
இன்னல்கள் யாவற்றையும் தகர்ப்போமடா!
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோமடா!
சுதந்திர தின விழாவில்_ பெற்ற
சுதந்திரத்தை காப்போமென சபதம் செய்வோமடா!....


நிஷா...
(எனது நூறாவது படைப்பு என் தாய்நாட்டிற்காக......)

எழுதியவர் : நிஷா (15-Aug-15, 9:51 pm)
பார்வை : 632

மேலே