நாணல்
ஆல மர நிழலில்
கலங்கலான
ஆற்றுப் படுக்கை மேல்
உறுதியான
உன்னதமான
நம்பிக்கையுடன்
எப்போதாவது
சுவாசித்து
எஞ்சிய
காலமெல்லாம்
சேற்று மண்ணின்
குழிகளுக்குள்
சிக்கி அமிழ்ந்து வாழும்
மண்மேல்
மறுக்கப் பட்டிருக்கும்
இவற்றின் வாழ்வை
யாரும் கண்டு
கொண்டதாகத்
தெரியவில்லை
கடந்து போன அந்தக்
கொடும் புயலுக்குப்
பின்னான நாள் வரை ...