சுதந்திரம் தவறென கூறுவேன்
சுதந்திரம் தவறென கூறுவேன் -
எப்படி சொல்லுகிறேன் என்றால் ,
சுதந்திரத்தின் அர்த்தத்தை
மானுடம் மாற்றி புரிந்து கொண்டதால் .............
தந்தையையும் தாயையும்
பிள்ளைகள் வெறுப்பதும்
கணவனை மனைவி வெறுப்பதும்
ஆசிரியனை மாணவன் எதிர்ப்பதும்
சுதந்திரத்தின் பிற்போக்கு சிந்தனையே .
சுதந்திரத்தின் சுதந்திரத்தால்
பேச்சாலும் எழுத்தாலும் ஊடக கருத்தாலும்
எத்தனையோ பேர்களின் சுதந்திரங்கள்
பறிக்க பட்டவையாகவே .
சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவே
ஒருவரின் சுதந்திரம் இன்னொருவரின்
சுதந்திரத்தில் தலையிடுவது
நியாயமான செயலல்ல .
நாகரீக சுதந்திரம்
ஒழுக்க கட்டுபாடுகளை நீக்கி
உடைகளை குறைத்து
தெருத்தெருவாய் அலைந்து கொண்டிருக்கிறது .
மது கோப்பைக்குள்ளே
தள்ளாடி தள்ளாடி
மரணத்தை நோக்கி பயணிக்கிறது
மாணவர் சுதந்திரம் .
பெற்றவர்களின் கட்டுப்பாடு அடிமைத்தனமாய்
பொல்லாதவர்களின் நடப்பு அவசியமாய்
இது புதுமை பெண்களின்
சுதந்திர இலக்கணக் கூற்று .
அதிகாரங்களை தவறாக வைத்து
அலங்கோலப்படுகிறது
அரசியல் சுதந்திரம் .
உடல்களை சிதைத்து வதைத்து
உதிர ஆற்றில் , உடல் குப்பைகளில்
அழுகை ஓலங்களின் இசைப்பில்
அன்றாடம் சிரிக்கிறது வெடிகுண்டு சுதந்திரம் .
அடிமை தனத்திற்கே
சுதந்திரம் அவசியம்
கட்டுபாடுகளுக்கு அல்ல .
சுதந்திரத்தின் அர்த்தம்
தவறாய் புரிந்து கொல்லப்பட்டதால்
கட்டுபாடுகளும் கூட
சுதந்திரம் கேட்கிறது -விளைவு கொடுமையாய் .
சுதந்திரம் , சுதந்திரம்
என்று எல்லாவற்றிக்கும் சுதந்திரம் எதிர்ப்பார்க்க படுமேயானால்
உலகத்தின் நிம்மதி
சிறைக்குள் செல்வது நிச்சயமே .
அளவீடுகள் அனைத்திற்கும் அவசியம் -
ஆகையால் ,
தவறாய் புரிந்துகொள்ளப்பட்ட சுதந்திரம்
தவறெனவே கூறுவேன் .