கவிதை -முஹம்மத் ஸர்பான்

கவிஞர்களின் கைவிரலில் தவழ்ந்து
வாசகனின் நெஞ்சில் உறங்குகிற
மூன்று மாதக் குழந்தை ஹைக்கூ
தமிழ் ஆழியில் நித்தம் நித்தம்
கரை தேடிப்பாடும் திரைகள்
அமுதம் வெல்லும் புதுக்கவிதை
காலங்கள் ஓடினாலும் தொனி
மாறாமல் இசையமைத்து பாடும்
குயிலைப் போல் மரபு
சந்த நடை சாந்தங்கள்
எதுகை மோனை பந்தாடும்
நான்கு வரி தீவு வெண்பா