சுதந்திரத் திருநாள் - இதுவொரு சுகம் தரும் திருநாள்

நேற்று நாம் கொண்டாடிய 69 ஆவது சுதந்திர தனத்திற்கு எழுதி எனது பள்ளியில் நான் வாசித்த கவிதை..... நேரமின்மையால் இன்று பதிகிறேன்.....

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறுபத்தெட் டான்டிற்கு முன்னால் நம்மை
---ஆண்டிருந்தான் வெள்ளையனும் ! அன்று தேசம்
வறுபட்டுப் பொறிபட்டு அழுது ழன்றே
---வாடிற்று வதந்கிற்று சோகம் என்றே
அறுபட்டுப் போனதடா வாய்மை நூலும்
---அடிபட்டுப் போனதடா அமைதிக் கோலும்
அறிவுற்றுப் பின்தேசத் தலைவர் எல்லாம்
---ஆர்த்தெழுந்தார் சுதந்திரத்தைக் கண்டோம் நாமும் !

கொள்ளையிருள் வேளையில்தான் சுதந்தி ரத்தைக்
--கொண்டோம்நாம் ! பாரதர்க்கு அன்று மட்டும்
நள்ளிரவில் வந்ததடா நல்ல விடியல்
---நட்டநடு நிசியினிலே உள்ள விடியல்
பள்ளமேலாம் மேடாசு ! இந்தி யாவும்
---பாரதரின் நாடாச்சு ! மகிழ்ச்சி யாச்சு !
வெள்ளைஎலாம் பறந்தாச்சு ! தேசம் விட்டு
---வேகமுடன் கப்பலேறி புறப்பட் டாச்சு !

சுயமாக ஆட்சிகொண்டோம் சுதந்தி ரத்தால்
---சுயமான இராஜ்ஜியத்தை அமைத்து நின்றோம்
நயமான சட்டங்கள் பண்பு யர்த்தும்
---நாகரிக சட்டங்கள் பின்ப மைத்தோம்
புயமொங்கி வல்லரசை எண்ணி இங்கே
---புறப்பட்டோம் இன்றும்நாம் அதனை நோக்கி
இயங்குகிறோம் இடையிடையே நின்றிட் டாலும்
---இனியிதையே மூச்சாகக் கொண்டு வாழ்வோம் !

இளையபார தத்தினரே எழுந்து நிற்போம்
---இருபதுக்குள் இந்தியாவை மேலே தூக்கிக்
களைந்திடுவோம் தீக்களைகள் ! நாட்டி னுள்ளே
---கவினுறவே மரம்வளர்ப்போம் ! கவிதை செய்வோம் !
விளைநிலத்தை உழுதிடுவோம் ! விலையி லாது
---வித்தகமாய்க் கல்வியினைக் கொடுத்தி ருப்போம்
முளைவிடுவோம் வேராக ! நன்மை தன்னை
---மூச்சாக கொண்டுவாழ்வோம் ! நன்றி ஜெய்ஹிந்த் !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (16-Aug-15, 3:24 pm)
பார்வை : 163

மேலே