தடம் மாறாத் தமிழ்

தேறல் தேடும் தேர்தல்
தெரிந்தெடுக்குமா /
தமிழன் தலை எழுத்து
மாற்றிடுமா/
தமிழா தடுமாறாதே
திடம் கொள்.
உன் உரிமை உன் நாடு உன் மக்கள்
எது உன் அரியாசனம்
சிந்தனையில் தெளிவாகி மொழி ஒன்றே
உனதென்று தெரிந்து விடு
அஞ்சாமல் அளித்து விடு
உன் வாக்கை உரிமையுடன்
வழங்கி விடு,
உலகில் தமிழன் என்றும் உயர்ந்து நிற்க
வழி பிறக்கும்
தமிழன் தாகம் தீர்க்கும் தகைமை உள்ள
தலைவனுக்கு தமிழா
தயங்காமல் போடு புள்ளடி,
உன் தாய் மண்ணை காப்பதற்கு
தகுந்த உன் நேரம் தானாக
வந்து விட்டது
இது ஒன்றே தமிழுக்கு தமிழன்
செய்யும் நற்செயல்
வாழ்த்தும் தமிழ், வாழ வைக்கும் தமிழ்,
தாலாட்டும் தமிழ், தடம் மாறாத் தமிழ் ,
உண்மைத் தமிழன் உறங்குவதில்லை
எண்ணங்கள் கை கூடும் வரை ,
தமிழா/ நீ தனித்தவன் இல்லை
தரணி எல்லாம் தமிழன் தயங்காதே
தமிழ் வாழ வேண்டும் தமிழன் ஆள வேண்டும்

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Aug-15, 1:36 pm)
பார்வை : 373

மேலே