இருளின் வெளிச்சம்

பேருந்தின் முன் இருக்கையில்
தாய் மடி தூக்கம் கொண்ட
கைக்குழந்தை.

அவள் உதடு வழி வந்த
தாய்ப்பால் எச்சம்
பூமியில் தெறித்தது
ஆலங்கட்டி மழையாக..

அவள் மூச்சுக்காற்றில்
பூ பூக்கும் ரோஜா மொட்டின்
ஓசையில் குறட்டைச்சத்தம்.

தூக்கத்தில் சிரிக்கிறாள்,
கருவறை இருட்டு கனவுலகில்
தொப்புள் கொடி குதிகால்களை
வருடியபடி தாலாட்டிருக்கும்..

பேருந்தின் ஒலிப்பான்
அவள் கனவைச் சிதைக்கிறது,
இருளிலிருந்து வெளிச்சத்தைக்
காணுகிறாள் அழுகை சத்தத்துடன்!

எழுதியவர் : அருண் குமார் (22-May-11, 6:33 pm)
சேர்த்தது : Arunkumar G
பார்வை : 481

மேலே