இசை கலைஞன்
நானொரு இசை கலைஞன்!
எனது ஞானம் காட்டவே புறப்பட்டேன்
என்கிற போதிலும்
வெற்றிகளை ரசிகனுக்கு சமர்பித்து விட்டு
தொடர்ந்து வாசிக்கிறேன்!
துயரங்களும் , துரோகங்களும்
தொடரும் வேளையில்
அதிர்கிறது என் இதயம்
என் இசை தட்டுகளைப்போலவே!...
வலி மிகுந்த வேளையிலும்
மீட்டுகிறேன் என் வீணையை!...
உலகம் கண்மூடி ரசிக்கிறது
உன்னத இசை என்று!...