வெள்ளைக் காகிதம் கலீல் ஜிப்ரான்
வெள்ளைக் காகிதம் ஒன்று
பனிக்கட்டி போலப்
பிரகாசமாய் , பரிசுத்தமா ய் இருந்தது..
அது சொன்னது,
“நான் பரிசுத்தமா னதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”
கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!
பல வண்ண வண்ண பென்சில்கள் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை
இன்று வரை
வெள்ளைக் காகிதம்
தான் விரும்பியப டி
பரிசுத்தமா னதாகவே இருக்கிறது ..
ஆனால்,
வெறுமையாக இருக்கிறது ..!!
கலீல் ஜிப்ரான்