சிறந்த ஞானி

உறவாடியது என்னவோ ஓரிரு நாட்கள் தான் ...ஆனால் நான் உன்னோடு வாழ்ந்துவிட்டேன் ஒரு நூரு ஆண்டுகள் ..

விட்டு விடு என்று பட்டும் படாமல் சொல்லி சென்றாய் ...
உன்னை விட்டு செல்லவா என் உயிரோடும் உறவோடும் உன்னை உறவாட செய்தேன் ...
இதற்க்கு நீ என் உடம்பில் பாதியை வெட்டி சென்றிருக்கலாம் ...

இது வேண்டாம் என வெறுப்புடன் சொன்னது நான் உன்னை வெறுப்பதற்கு தான் என்று நன்கு அறிவேன் ..
அப்படி வெறுக்க நேரிட்டால் நான் என்னை தான் வெறுக்க வேண்டும்..

நாளு நாட்கள் பழக்கம் பாதியில் வந்தது தானே பதியிலே விட்டு விடலாம் என்றாய். .
ஒருவரை உள்ளத்தில் நினைக்க ஒரு நொடி போதும் நாளு நாட்கள் நானுறு வருடம் ஆகும் எனக்கு என்பதை உணர வில்லை நீ ....

இந்த புவி உலகில் நான் வாழும் வரை என் நினைவு உன் எண்ண அலைகளில் வர வில்லை என்றால் ...
நீ தான் உலகிலேயே சிறந்த ஞானி....

எழுதியவர் : vasu (17-Aug-15, 12:53 pm)
பார்வை : 285

மேலே